உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மனந்திறந்தார் அர்ச்சுனா எம்.பி
அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் (Trincomalee) வைத்து இன்று (20.04.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “தற்போது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றும் அவரின் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயோ (Mahinda Rajapaksa) அல்லது கோட்டாபய ராஜபக்சயோ (Gotabaya Rajapaksa), மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) விடமோ இது தொடர்பில் இன்னும் எதுவும் கேட்கவில்லை.
அம்பை தான் அவர்கள் கைது செய்திருக்கிறார்களே தவிர அம்பை எய்தவரை இன்னும் கைது செய்யவில்லை." என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த அறிக்கை இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரினால் குறித்த அறிக்கை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
