சிறீதரனின் முடிவை தமிழரசுக்கட்சி ஏற்குமா.!
ஏக்கிய ராஜ்ய என்ற வரைபு நிராகரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை இலங்கை தமிழரசுக்கட்சி எடுக்குமாக இருந்தால் அந்த நிலைப்பாட்டுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்பு.
எனவே இந்த விடயத்தை நாம் வெளிப்படையாகவே செய்கின்றோம்.இவ்வாறு ஏற்படும் முன்னேற்றங்கள் தமிழ் இனத்திற்கு முன்னேற்றமாக அமையும் என நான் நம்புகின்றேன்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்(selvarajah kajendren).
ஐபிசி தமிழ் ‘களம்’ நிகழ்ச்சிக்கு அவர் பிரத்யேகமாக அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதைய தையிட்டி விகாரை போராட்டம், அநுர அரசின் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு எவ்வாறு அமையப்போகின்றது, மற்றும் தமிழ் தேசிய கட்சிகளின் பயணம் என்பன தொடர்பாக அவர் விரிவாக தெரிவித்த விடயங்கள் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
