சாதாரண தர பெறுபேறு வெளியாகுமா? கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் ஒரு இலட்சத்து 69 ஆயிரம் பேர் அழகியல் கற்கைகளை தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படவேண்டியுள்ளன.
தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த செயற்பாடுகளில் இருந்தும் விலகுவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.