கோட்டாபய பதவி விலகுவது தொடர்பில் வெளியாகும் தகவல்- உண்மை நிலை என்ன?
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksha) பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று இன்றிரவு தெரிவித்துள்ளது.
ஆனால் சமூக ஊடக பதிவுகளை கண்காணிக்கும் factcrescendo இணையத்தளம், இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அரச தலைவரின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவும்(Kingsley Ratnayake) உறுதிப்படுத்தியுள்ளார்.
அரச தலைவர் முன்னிலையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக அறிவிக்கப்படும் என கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச தலைவரை எவ்வாறு நியமிக்கலாம் அதேபோன்று அவரை பதவியில் இருந்து நீக்குவது எவ்வாறு என்பது அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.