உதய கம்மன்பிலவின் பதவியை பறிக்கத் திட்டம்- நாடு திரும்பியதும் கோட்டாபய எடுக்கப்போகும் முடிவு என்ன?
பொதுஜன முன்னணியின் மூத்த உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், உதய கம்மன்பிலவின்(Udaya Gammanpila) அமைச்சுப் பதவியை உடனடியாக பறிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம்(Mahinda Rajabaksha), கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்கொட்லாந்து சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajabksha) நாளை மறுதினம் நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னரே இந்த விவகாரம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முடிவையும், 'மொட்டு' கட்சியின் தலைவர்களையும் கம்மன்பில கடுமையாக விமர்சித்து வருவதை அடிப்படையாக வைத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தினை வழங்கும் உடன்படிக்கை தொடர்பில் பங்காளிக் கட்சிக்கள் கடுமையாக சாடி வருவதுடன், இந்த உடன்படிக்கை குறித்து தமது அதிருப்தியை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர்.
அதேபோன்று கோட்டாபய ராஜபக்சவை அண்மையில் சந்தித்துப் பேசிய அவர்கள், இது குறித்து தமது நிலைப்பாட்டினையும் தெளிவுபடுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.