தவெக தலைவர் விஜயின் கைது..! தமிழக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு: பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்தின், கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கைது செய்ய நேரிட்டால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மீது வழக்கு பதியப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யை கைது
கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வதே முக்கியமானது. கரூரில் 41 பேர் பலியானது சாதாரண விடயமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவத்திற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? நாங்கள் காவல்தறை பாதுகாப்பு காவல்துறை பாதுகாப்பு அளித்தோம். அத்துடன் நிபந்தனைகளை விதித்து ஆலோசனை வழங்கினோம். எங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம்.
விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால், அவர் கைது செய்யப்படுவார், தேவையில்லாத சூழலில் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
