விமல் - வாசு - கம்மன்பில தொடர்பில் அரசாங்கத்தின் இறுதி முடிவு: கோட்டாபயவிடம் வலியுறுத்தப்பட்ட விடயம்? (காணொளி)
SLPP
SriLanka
Vasudeva Nanayakara
Wimal Weeravansa
Udaya Gummanpila
By Chanakyan
சிறிலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான கருதப்படும் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் பயணங்களுக்கு தடை ஏற்படுத்துவோர் வெளியேற்றப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினை ஆட்சி பீடத்தில் ஏற்றினால் அந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் அரச தலைவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,