அமெரிக்காவில் பசில்! மீண்டும் களமிறங்கிய விமல் தரப்பு
நாட்டில் கஷ்டமான நிலைமை காணப்படும் போது பொருளதார மறுசீரமைப்பு செயலணிக் குழுவின் தலைவர் பசில ராஜபக்ச, நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்க சென்றுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் மட்டத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைத்ததன் ஊடாக நாட்டில் கொவிட் பரவியமை தொடர்பாகவும் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக நாட்டை முடக்காமை குறித்தும் பசில் ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கீழ் மட்டத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறவே பசில் ராஜபக்ச அமெரிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு சொந்தமான செய்தி இணையத்தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து புறப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் காணாமல் போய் இருந்த விமல் வீரவங்ச உட்பட பசில் எதிர்ப்பு அணியினர், அவர் நாட்டின் இல்லாத தருணத்தில் மீண்டும் அரசாங்கத்திற்கு பசில் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை இந்த செய்தியின் மூலம் தெரியவருகிறது.