அரசாங்கத்திற்கு எதிராக விமல் வெளியிட்ட சரச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு அழைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு காவல்துறை அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாளை (06.10.2025) காலை 10 மணிக்கு தங்காலை காவல்துறையில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது
“பெலியத்தே சனா” எனப்படும் நபர் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பிலான உண்மைகளை விசாரிக்க இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமல் குற்றச்சாட்டு
இது தொடர்பில் தெரியவருகையில், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்ததாக விமல் வீரவன்ச அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அத்துடன் அரச அனுசரணையில் தான் போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகவும் மற்றும் அரச அனுசரணையுடன் தான் போதைப்பொருட்கள் தற்போது கைப்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா எனும் போதைப்பொருள் வியாபாரி அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிப்பதற்கு அரசியல் தரப்பில் இருந்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
விளக்கமளித்த அரசாங்கம்
இந்தநிலையில், இந்த சனா தான் படகு ஊடாக அம்பாந்தோட்டை பகுதிக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்துள்ளார் எனவும் ஆகவே பிறரை குற்றஞ்சாட்ட முன் தமது தரப்பின் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
இருப்பினும், விமல் வீரவன்ச விவரித்த புவக்தண்டாவே சனாவுடன் எந்த அரசியல் தொடர்பும் தமது தரப்புக்கு இல்லை என தேசிய மக்கள் சக்தி விளக்கமளித்திருந்தது.
அத்துடன், வீரவன்சவைக் கைது செய்து இந்தக் கூற்று தொடர்பாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவி்டம் தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் தற்போது விமல் வீரவன்சவிற்கு காவல்துறை அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
