அமைச்சுப்பதவியை இழந்தாலும் எதிர்ப்பேன் - விடாப்பிடியில் விமல்
Wimal Weerawansa
Yugadanavi Power Station
burning-fire
By Sumithiran
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு செய்து கொள்ளப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்த போதிலும், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் பசில் ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக வீரவன்ச தெரிவித்தார்.
இந்த மின் உற்பத்தி நிலையத்தை கையளித்தால் பல பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனவும் பதவிகளை இழந்தாலும் எதிர்ப்பேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.