மக்களின் முன்னால் ஹீரோக்களாக முயலும் அமைச்சர்கள்
srilanka
wimal weerawansa
podujana peramuna
By Vasanth
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பான விடயத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச செயல்பட்ட விதம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பத்தரமுல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் தெரிவிக்கையில், அமைச்சர் வீரவன்ச அமைச்சரவை கூட்டு பொறுப்பின் அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
செய்தியாளர் மாநாடுகளை நடத்துவதன் மூலம் சமுகத்தின் முன்னால் ஹீரோக்களாக இருக்க முயற்சிக்கும் இவர்கள் அரசாங்கத்தின் நலனுக்காக நம்பிக்கையுடன் செயற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் எவரது செயற்பாட்டாலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் நாட்டின் வளர்ச்சி யாராலும் பாதிக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி