வீரவன்சவிற்கு ஏற்பட்ட பதற்றத்தில் கூடாரத்தை கழட்டிய இரகசியம்!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நாட்டுக்கு ஆபத்தானது எனக் கூறி கல்வி அமைச்சுக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதே இவரது பிரதான அரசியல் கோரிக்கையாக அமைந்தது.
உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால் போராட்டத்திற்கு நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்த போதும், அவர் தனது போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்தார்.
இப்போராட்டத்தின் விளைவாக, சர்ச்சைக்குரிய சில பாடப்புத்தக விநியோகங்களை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய அரசியல் நெருக்கடிக்கு உள்ளானது.
இதன் மூலம் விமல் வீரவன்ச மீண்டும் ஒரு தீவிர தேசியவாதப் போராட்டவாதியாகத் தன்னை அரசியல் களத்தில் பலமாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
இதனடிப்படையில் குறித்த விவகாரத்தின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் அண்மைய அரசியல் களம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |