ரணிலுக்கு பாகிஸ்தானில் இருந்து கிடைத்த செய்தி
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Pakistan
By Vanan
ரணிலுக்கு பாகிஸ்தான் அதிபரிடமிருந்து வாழ்த்து
அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, பாகிஸ்தான் அதிபர் கலாநிதி அரீப் அல்வி (Arif Alvi) தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபருக்கு இன்று, (01) விசேட வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள பாகிஸ்தான் அதிபர், இரு நாடுகளுக்கிடையில் நிலவுகின்ற உறவை இரு நாட்டினதும் முன்னேற்றத்திற்காக மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தற்போதுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும்
அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ், இலங்கை தற்போதுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் என அரீப் அல்வி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தி, மிக நெருக்கமாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

