பயணிகளுடன் ஏரியில் மூழ்கிய படகு: பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 33 பேர் பலி
#Uganda #South Africa #People #Death
By Vasanth
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. கொரோனா வைரஸ் காரணமாக அண்டை நாடான உகாண்டாவுடனான அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் காங்கோ தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் உகாண்டா சென்றிருந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த சிலர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக காங்கோவுக்கு திரும்ப முடிவு செய்தனர்.
அதன்படி 40 பேர் உகாண்டாவில் இருந்து ஆல்பர்ட் ஏரி வழியாக காங்கோவுக்கு படகில் புறப்பட்டனர். காங்கோவின் இட்டூரி மாகாணத்துக்கு அருகே சென்ற போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு ஏரியில் கவிழ்ந்தது.
இதில் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 33 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி