கதிர்காமத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுக - பஸ்நாயக்க நிலமே போர்க்கொடி
Sri Lanka Army
Sri Lanka Police
Ranil Wickremesinghe
By Sumithiran
கதிர்காமம் விகாரையிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்திலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து விலக்கிக் கொள்ளுமாறு கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர அதிபர் ரணிலிடம் கோரியுள்ளார்.
பக்தர்களை கையாளும் போது இராணுவத்தினர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக பஸ்நாயக்க நிலமே அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு சிநேகபூர்வமாக சேவையாற்றிய காவல்துறை
இதற்கு முன்னர் ஆலயத்தின் பாதுகாப்பிற்காக கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்கள் பக்தர்களுக்கு சிநேகபூர்வமாக சேவையாற்றியதால் மீண்டும் அவர்களது பாதுகாப்பை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிலில் கடமைகளில் இருந்து இராணுவத்தினரை பாதுகாப்பு தரப்பினர் நீக்கினாலும், அவர்கள் வழங்கிய சேவை மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி