தங்கப் பிரியர்களுக்கு பேரிடி! நிறுத்தப்பட்டது தங்க விற்பனை
colombo
Price
People
Gold
SriLanka
By Chanakyan
இலங்கையில் தங்கத்திற்கான முதலீடு பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் தங்க ஆபரண உற்பத்திக்கான தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தங்க விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தங்க, ஆபரண வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கொழும்பு - செட்டித்தெரு பகுதிகளில் தங்க கட்டிகள், பிஸ்கட்கள் மற்றும் நாணயங்கள் விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு செட்டித்தெரு பகுதியில் இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 205,000 ரூபாவாகவும் மற்றும் 22 கரட் தங்க பவுண் 189,600 ரூபாவாகவும் விற்பனை விலை பதிவாகியுள்ளது.
எனினும் குறித்த விலையில் தங்கத்தை விற்க இடமில்லை என்றும் வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி