சிகிரியாவின் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Sigiriya
By Sathangani
உலக பாரம்பரிய தளமான சிகிரியாவின் (Sigiriya) கண்ணாடி சுவரை சேதப்படுத்தும் வகையில் கிறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிகிரியா காவல்துறையினரால் நேற்று (14) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேதப்படுத்திய பெண்
அவிசாவளையை சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் மேலும் சிலருடன் சிகிரியாவுக்குச் சென்றிருந்தபோது இந்தச் செயலைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, இதேபோன்று சிகிரியா கண்ணாடி சுவரில் கிறுக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி