வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும் நுட்பமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து கட்டார் டோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பெண் ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைகளுக்கு இடையில் நுட்பமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்துக்கொண்டு வந்துள்ளார்.
சுமார் 4,598 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருட்களை இவரிடம் இருந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.