சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
மீரிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரிகம காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 1080 லீற்றர் கோடா, 109 போத்தல்களில் இருந்த 81 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதானவர் அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மீரிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்