T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Kiruththikan
கஹட்டகஸ்திகிலிய, பலுகெடுவெவ பிரதேசத்தில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து T-56 துப்பாக்கி, 03 மகசீன்கள் மற்றும் 184 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தொகையொன்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்