சுவாச கோளாறால் அனுமதிக்கப்பட்ட பெண் கொவிட் தொற்றால் உயிரிழப்பு
COVID-19
Gampaha
By Sumithiran
சுவாச கோளாறு காரணமாக அண்மையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, இதன்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
முதலாவது மரணம்
65 வயதுடைய குறித்த பெண்ணுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவருக்கும் கொவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயல்படும் தமிழ் எம்.பிக்கள் : குற்றம் சாட்டும் மொட்டு கட்சி!
கொவிட்-19 வைரஸ் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அண்மையில் பதிவான முதலாவது மரணம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி