யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
யாழில் (Jaffna) துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (30.03.2025) மரணமடைந்துள்ளார்.
அரசடி வீதி பகுதியை சேர்ந்த 70 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண் நேற்றையதினம்(29) தட்டாதரு சந்தியூடாக அரசடி வீதிக்கு திரும்ப முயற்சித்துள்ளார்.
இதன்போது, கே.கே.எஸ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம்(30) உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
