திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் படுகொலை
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
By Harrish
திருகோணமலை(Trincomalee) தனியார் வைத்தியசாலை ஒன்றில் பெண்ணொருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் இன்று(05.11.2024) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய குறித்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நிலையியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, உயிரிழந்த 63 வயதுடைய பெண்ணின் கணவரது சகோதரரே இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரிவியவந்துள்ளது.
இந்நிலையில், 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்