இளம் குடும்பப் பெண் வெட்டிப் படுகொலை - மதுபோதையில் நின்ற கணவன் கைது
By Thulsi
இளம் குடும்பப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலைக்கான காரணம்
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர், சம்பவத்தின்போது அயல் வீட்டில் மதுபோதையில் நின்ற நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படுகொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி