வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய பெண் கைது
Bandaranaike International Airport
Ratnapura
Dubai
Sri Lanka Customs
By Jaso
டுபாயிலிருந்து(dubai) விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (28) காலை வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி (ratnapura)பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் வியாபாரி ஆவார்.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிகரெட்
அவர் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மதிப்புள்ள சிகரெட் தொகையுடன் வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர் கொண்டு வந்த 8 பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 83,600 சிகரெட்டுக்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சிகரெட் தொகையின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்