திருகோணமலையில் விபத்தில் பெண்ணொருவர் படுகாயம்!
திருகோணமலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (17-10-2026) இடம்பெற்றுள்ளது.
கோமரங்கடவல காவல் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்திக்கு அருகிலுள்ள ரதனஜோதி பிரிவேனாவுக்கு அருகில் விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உழவு இயந்திரம் பயணித்துக்கொண்டிருந்த போது அதன் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் அதனுடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர் கோமரங்கடவல, கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த என்.எம்.வசந்தமாலா (46 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |