மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் மரணம் - புதுவருட தினத்தில் நடந்த துயரம்
jaffna
dead
electric shock
kaithady
By Kanna
கைதடி வடக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுவருட தினத்தன்று காலை வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்ற பின்னர் குறித்த பெண் தொலைக்காட்சி பெட்டியை இயக்க முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதான பரமேஸ்வரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி