பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
நீச்சல் குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர், ஒரு கண்ணில் பார்வையை இழந்த சம்பமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
பயங்கர நோய்க்கிருமி ஒன்றின் தொற்றுக்கு ஆளாகியே ஒரு கண்ணில் பார்வை இழக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்திலுள்ள Crayford என்ற இடத்தைச் சேர்ந்த ஷெரீன் (Shereen-Fay Griffin,) என்ற 38 வயதுடைய பெண்ணே குறித்த நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
நோய்த்தொற்று
நீச்சல் குளம் ஒன்றில் குளிக்கச் சென்றபோது, அவரது கண்ணில் நோய்த்தொற்று உருவாகியுள்ளது.
இதன் பின்னர் மருத்துவமனைக்கு, சென்று பரிசோதித்துள்ளார்.அவரை பரிசோதித்து விட்டு மருத்துவர்கள் சில மருந்துகளைக் கொடுத்துவிட்டு, மீண்டும் அழைப்பதாகக் கூறியுள்ளார்கள்.
ஆனால், 10 வாரங்களாகியும் ஷெரீனுக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரவில்லை .
பார்வை இல்லை
அடுத்த நாள் கண் விழித்து பார்த்த போது அவர் தனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை என்பதை உணர்திருக்கிறார்.
உடனடியாக ஷெரீன் மருத்துவமனைக்கு சென்ற போது தான் அவருக்கு Acanthamoeba keratitis என்னும் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதை மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
ஆனாலும் ஷெரீனின் கண் பார்வையை மீட்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு ஷெரீன் செல்ல அவர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக அவரது நிலை மோசமாகி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனவே அவர் ஒரு கண்ணில் பார்வை இழந்தது இழந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.