கொலம்பியா நிலநடுக்கம் : 36 மணிநேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட பெண்
கொலம்பியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு 36 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்
மேற்கு கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 36 மணி நேரமாக இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 32 வயதுப் பெண் ஒருவரேஉயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பத்து மணிநேரம் மீட்பு நடவடிக்கை
பெரேரா நகரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியிலிருந்து, 10 மணி நேர நீண்ட மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு டேனியலா லார்கோ மீட்கப்பட்டார்.
அவர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நான்கு கொங்கிரீட் தூண்களுக்கு கீழே தீயணைப்பு வீரர்கள் தோண்டிய சுரங்கப்பாதை வழியாக இறுதியாக அவரை அடைந்தனர்.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தனது மகள் உதவி கேட்டு கதறியதை உள்ளூர்வாசி ஒருவர் கேட்டதாக லார்கோவின் தாய் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை
கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா சமூக ஊடகங்களில் அவரது மீட்பைக் கொண்டாடி, அதை "நமக்கு நம்பிக்கையைத் தரும் செய்தி" என்று விவரித்தார்.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |