சிறைக்குள் இருக்கும் கணவனுக்கு போதைப்பொருள் கடத்திய மனைவி கைது!
Kalutara
Sri Lanka Police Investigation
Prisons in Sri Lanka
By Laksi
களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட பெண் ஒருவர் களுத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் களுத்துறை சிறைச்சாலைக்கு 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது முலட்டியான, பயாகல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
எலும்புகளில் போதைப்பொருள்
குறித்த பெண் சிறையில் இருக்கும் தனது கணவரை பார்க்கச் செல்லும்போதே போதைப்பொருளை எடுத்துக்சென்றுள்ளார்.
இந்நிலையில் தனது கணவருக்கு உணவு வழங்கும் போர்வையில் அவர் கொண்டு வந்த கோழிப் பொதியின் எலும்புகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண் தனது 06 வயது மகளுடன் சிறைச்சாலைக்கு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி