வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி மாயம்
வவுனியா (vavuniya)வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவரை காணவில்லை என நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் சர்மிளா (வயது 22) என்ற இளம் யுவதியே காணாமல போனவராவார்
வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற யுவதி
வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வசித்து வந்த மேற்படி யுவதி ஒருவர் தொடர் தலைவலி காரணமாக மருந்து எடுப்பதற்காக பேருந்தில் நேற்றைய தினம் (18.08) வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். குறித்த யுவதி வைத்தியசாலையில் மருந்தும் எடுத்துள்ளார்.
எனினும், யுவதி இன்று (19.08) வரை வீடு வந்து சேரவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடிய பெற்றோர் இது தொடர்பில் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாடு தொடர்பாக நெளுக்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள்
இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கோ அல்லது 0758446312, 0768446683 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் வழங்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
