சிறையில் சுதந்திரமாக நடத்தப்படும் பிள்ளையான் - மட்டக்களப்பில் பகிரப்படும் கடிதங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் கைது செய்யப்பட்டடு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் படு கொலை தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அவர் அங்கு சுதந்திரமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மட்டக்களப்பில் சமீபத்தில் பரவியுள்ள சில கடிதங்கள், இதை உறுதிப்படுத்தும் வகையில் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்தக் கடிதங்களில், பிள்ளையான் அரசியல் தொடர்புகளை பராமரிப்பது, குறிப்பிட்ட ஆதரவாளர்களுக்கு உத்தரவுகள் அனுப்புவது, மேலும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “இன்றைய அதிர்வு”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
