புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட 16 கைதிகளை கைது செய்த இஸ்ரேல் படை
தொடர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் சேர்த்து 16 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் படை கைது செய்துள்ளது.
இந்த கைதுடன் சேர்த்து அக்டோபர் 7 அன்று இஸ்ரேலியப் போர் தொடங்கியதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 4520 ஆக உயர்ந்துள்ளது.
21 வயதான Faten Majed Masalmeh என்ற பெண் மேற்குக் கரையில் வசிக்கிறார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்
இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறார்.
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வடக்கு மேற்குக் கரை நகரமான Nablus க்கு தெற்கே உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.
அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்குக் கரையில் வசித்து வந்தாலும் அவர் காசாவைச் சேர்ந்தவர் என்பதால் கைது செய்யப்பட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீனியர்கள்
இஸ்ரயேலிய ராணுவ வீரர்கள் இவரை கைது செய்த போது மருந்து எடுத்துச் செல்ல கூட அனுமதிக்கவில்லை.
கைது செய்த ஏனையவர்கள் பெத்லகேம், ஜெரிகோ, துல்கர்ம், ரமல்லா, ஹெப்ரோன் மற்றும் ஜெருசலேம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய படை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |