டித்வா பேரழிவு! இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கால்
அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலை அடுத்து மலையகத்தில் பல பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டு பலரின் உயிர் பரிதாபமாக பறிபோனது.
இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்றபோதிலும் துரதிஷ்டவசமாக இருவரைத் தவிர வேறெவரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
காலின் ஒரு பகுதி
இந்த நிலையில் கொத்மலை - இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை காவல் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார்.

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணுக்குள் கால் ஒன்று புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் குறித்த உடல் பாகம் மீட்கப்பட்டது.
இது மேலதிக விசாரணைகளுக்காகவும் அடையாளங்காண்பதற்காகவும் மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
27 பேரின் சடலங்கள்
கொத்மலை - இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவில் சிக்கிய 27 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த வான் மற்றும் லொறி என்பனவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
3 நாட்கள் முன்