தலிபான்களின் அடுத்த அதிரடி -பெண்கள் ஐ.நாவில் பணியாற்ற தடை
United Nations
Afghanistan
Taliban
By Sumithiran
ஆப்கானில் ஆட்சி செய்து வரும் தலிபான் அமைப்பினர் பெண்கள் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அந்த வகையில், பெண்கள் கல்வி நிலையங்களுக்கும், வேலைக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை சமீபத்தில் பிறப்பித்த நிலையில், என்.ஜி.ஓ போன்ற அமைப்புகளிலும் பணியாற்றக்கூடாது என்று எச்சரித்தனர்.
இந்த நிலையில், தற்போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் எவரும் ஐ.நா அமைப்பில் பணியாற்றக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.
இதற்கு, ஐ நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘எழுத்துப்பூர்வமாக அன்றி, தலிபான்கள் வாய் மொழி மூலமாக உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத்துறை சார்ந்த உயிர்காக்கும் கருவிகளை இயக்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி