நள்ளிரவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இளம் தாய்!
police
sri lanka
death
By Shalini
சூரியவெவ, மஹபெலெஸ்ஸ பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவனிடம் இருந்து பிரிந்து தனது மகனுடன் தனிமையில் வாழந்து வந்த குறித்த பெண் மற்றொரு ஆணுடன் தொடர்பிணை பேணி வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் சூரியவெவ பொலிஸினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டி பதில் நீதவான் நிரோஷன் கமகே, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.