மங்களவின் மரணத்தை முன்கூட்டியே தெரிவித்த பெண் பிக்கு - காணொளி வெளியாகி பரபரப்பு
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தேறி வந்த நிலையில் நேற்றையதினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது மரணம் தொடர்பில் முன்கூட்டியே பெண்பிக்கு ஒருவர் தெரிவித்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி – பல்லேகலையிலுள்ள கோதமி விகாரையின் பிரதான பெண் பிக்குவாகிய கம்மட்டாச்சாரி கோதமீ தேரர் கடந்த ஜுலை மாதம் 03ஆம் திகதி சமூக வலைத்தளமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் பங்கேற்றிருந்தார்.
அதன்போது, கருத்து வெளியிட்டிருந்த அவர், “இலங்கையில் அனைவராலும் அறியப்பட்ட பிரபல அரசியல்வாதி மரணிக்கப்போகின்றார். அவர் அரசியலுக்கு ஆற்றிய சேவை மதிக்கத்தக்கது. உலகமும் அவர்பற்றி பேசும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மங்கள சமரவீர நேற்று உயிரிழந்தார்.
இதன்படி அவர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப்பற்றியே ஆருடம் வெளியிட்டிருந்ததாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.