இந்தோனேசிய பெண்கள் ஐவர் இலங்கையில் கைது
கல்கிசை சேரம் மாவத்தை பிரதேசத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 5 இந்தோனேசிய பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து இந்தோனேஷிய பெண்களும் சர்வதேச ஹோட்டல்களில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர்கள் நாட்டுக்கு வந்தவுடன் அவர்களது பாஸ்போட் பறிமுதல் செய்யப்பட்டு கட்டாய விபசார தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்கள் இன்று பிற்பகல் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்போது, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.