மகளிர் உலகக்கோப்பை - மூன்றாவது இடத்திற்காக மோதும் சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியா
2023 FIFA மகளிர் உலகக் கோப்பை மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இன்று சுவீடனும், அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன.
நாளை தினம்(20) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து ஸ்பெயினை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், இன்றைய நாளுக்கான ஆட்டத்தில் முதலில் அவுஸ்திரேலியாவும் ஸ்வீடனும் மோதுகின்றன.
இப்போட்டியானது இலங்கை நேரப்படி, இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
தரவரிசையில் மூன்றாவது இடம்
தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சுவீடன் இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய சுவீடன் ஜேர்மனியிடம் தோல்வியடைந்தது.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சுவீடன் மூன்று முறை வென்றுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் நடைபெற்ற போட்டியிலும் சுவீடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
அத்துடன், டோக்கியோ, ரியோ ஒலிம்பிக்கில் சுவீடன் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.