"தீர்வுகள் இல்லை என்றால், விரைவில் டெஸ்ட் போட்டி” -தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எதிராக பல அத்தியாவசிய சேவைகளின் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
துறைமுகங்கள், பெட்ரோலியம், மின்சாரம், நீர், வங்கிகள், பல்கலைக்கழகங்கள், ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
நாளை காலை வரை தொடரவுள்ள வேலை நிறுத்தம்
இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை (02) காலை 07.00 மணி வரை தொடரும் என துறைமுக தொழிற்சங்கங்களின் பேச்சாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.
துறைமுக வளாகத்திற்குள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு நாள் போட்டி. இதைத் தொடர்ந்து விரைவில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. எனவே, அதை தவிர்க்க வேண்டுமானால், அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும்,'' என, எச்சரித்தார்.
