ஒக்டோபரில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம்: அமைச்சர் மனுஷ நாணயக்கார
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் மூலம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு பணவனுப்பல்
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,

“கடந்த ஒக்டோபர் மாதத்தில் 517.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.
Received $517.4 million in remittances for the month of October, bringing the total to $7.6 billion since I assumed duties as Minister of Labour and Foreign Employment in May 2022. This is a testament to the hard work and dedication of our overseas workers
— Manusha Nanayakkara (@nanayakkara77) November 13, 2023
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இவ்வாண்டு ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இவ்வாறு வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் 7.6 பில்லியன் டொலர் கிடைத்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்