தென்னாபிரிக்காவிற்கு கைநழுவிய 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண போட்டி : சஜித் கண்டனம்
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்காவிற்கு மாற்ற காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கிரிகெட் நெருக்கடி
“இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு முன்னர் எமது நாட்டில் நடத்தப்பட்ட சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 5 கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அந்த 5 போட்டிகளும் இடைக்கால நிர்வாகத்தின் கீழே இடம்பெற்றிருக்கின்றன.
இடைக்காலக் குழு
2000 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, 2002 சாம்பியன்ஸ் கோப்பை, 2006 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, 2011 சி.டபிள்யூ.சி மற்றும் 2012 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கோப்பை போன்றன இடைக்காலக் குழுக்களின் கீழே நடத்தப்பட்டுள்ளன.
அதனால், இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர், அதிபர் விசாரணை நடத்த வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையி்டமும் கேள்வி எழுப்ப வேண்டும். அத்துடன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்காவிற்கு மாற்ற இலங்கை கிரிக்கெட் சபைக்கு எவ்வாறு தூண்ட முடியும்.
அதனால் கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட அதிகாரிகளின் இந்த தேசத்துராேக செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக அதிபரை அறிவுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |