ஆட்டம் காட்டும் ட்ரம்ப் - உலக சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்
உலக சந்தையில் (world market) தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவிற்கும் (China) அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11.05.2025) 3200 அமெரிக்க டொலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மொத்தம் 145 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
கொழும்பு தங்கச் சந்தை இன்று அறிவித்த தங்க விலை விபரங்களின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 963,169 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 33,980 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 271,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 31,150 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 249,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
