பீடித்திருந்த கெட்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டது - வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
உலக மக்கள் அனைவரும் தமதுபொறுப்பு எனக் கருதி, கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர (dr. chandima jeewandara) தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொவிட் நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், கோவிட் வைரஸ் தொற்று நோயின் கெட்டகாலம் முடிவுக்கு வந்துள்ளது.
கொவிட் வைரஸ் தனது இளம் பருவத்தை கடந்துள்ளது. இதனடிப்படையில் தொற்று நோய் நிலைமை படிப்படியாக குறையும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மத்திய நிலையத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்ட பரிசோதனையை மேற்கோள்காட்டி ஜீவந்தர இதனை கூறியுள்ளார்.
இந்த பரிசோதனைக்கு அமைய கோவிட் தடுப்பு தடுப்பூசி மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. இதனடிப்படையில், உலக மக்கள் அனைவரும் தமதுபொறுப்பு எனக் கருதி, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானது என்றார்.