அடுப்பு இல்லாமல் 5 நிமிடத்தில் 100 வகை உணவு - நோபல் உலக சாதனை சான்றிதழ்!
Tamil nadu
Healthy Food Recipes
India
By Pakirathan
அடுப்பு இல்லாமல் வெறும் 5 நிமிடத்தில் 100 வகையான உணவுகள் சமைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின், தமிழ்நாட்டில் ராஜபாளையம் எனும் இடத்தில் வியாபார சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான இயற்கை உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை இளைய மற்றும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல் எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நோபல் உலக சாதனை சான்றிதழ்
குறித்த நிகழ்வில், பல இடங்களிலும் இருந்து வருகை தந்த 100 சமையல் வல்லுநர்கள் கலந்து கொண்டு அடுப்பில்லா முறையில் உணவு சமைத்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
சுமார் 5 நிமிடங்கள் 13 வினாடிகளில் 100 பேர் தனித்தனியாக 100 விதமான இயற்கை உணவுகளை செய்ததுடன், நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி