உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் : அமெரிக்கா, சீனா முன்னிலை
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளாவிய சக்தி தரவரிசையில், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக தமது நிகரற்ற நிலைகளைத் தக்கவைத்துள்ளன.
அரசியல் செல்வாக்கு, பொருளாதார வளங்கள் மற்றும் இராணுவ வலிமை ஆகியவற்றை வைத்து இந்த பட்டியல் மதிப்பிடப்பட்டுள்ளது.
தனித்து நிற்க வைக்கும் காரணிகள்
அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார செல்வாக்கு, பாதுகாப்பு வரவு - செலவுத்திட்டம், ஆயுதம், உலகளாவிய கூட்டணிகள், மென்மையான சக்தி மற்றும் இராணுவ வலிமை, அதிகாரம் என்பன ஒரு நாட்டின் அரசியல் வலிமை அல்லது வலுவான ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்று சிலர் வாதிட்டாலும், இந்தப் பண்புகளே நாடுகளைத் தனித்து நிற்க வைக்கின்றன.
முதலிடத்தில் அமெரிக்கா
2023 ஆம் ஆண்டிற்கான அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் முதன்மை உற்பத்தியாளராக அமெரிக்கா தன்னை நிலை நிறுத்தியுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேட்டோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்குள் தனக்கான முக்கியத்துவத்தை பிடித்து, அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்தில் சீனா
ஆய்வின்படி, நிலப்பரப்பு மற்றும் பொருளாதாரத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக சீனா உள்ளது.
சீனா அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
மிகப்பெரிய பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவம் ஆகியவை சீனாவை இரண்டாம் இடத்தில் நிற்க வைத்துள்ளது.
மூன்றாம் இடத்தில் ரஷ்யா
பெப்ரவரி 2022 இல் தொடங்கப்பட்ட உக்ரைன் மீதான படையெடுப்பில் போராடிய போதிலும், ரஷ்யா தரவரிசையில் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் உற்பத்தி போன்ற ரஷ்யாவின் பெரிய தொழில்கள், அத்துடன் நாட்டின் முக்கிய ஆயுத ஏற்றுமதியாளராக ரஷ்யா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்தடுத்த இடத்தில் ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள்
ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து, தென் கொரியா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன.
இந்த நாடுகள் யாவும் பொருளாதாரம், இராணுவம், ஏற்றுமதி, அண்டை நாடுகள் உயர்வு ஆகியவற்றில் மேம்பட்ட இடங்களை பிடித்துள்ளன.
12 ஆம் இடத்தில் இந்தியா
வேகமாக வளர்ந்து வரும், பன்முகப் பொருளாதாரம், பெரிய, திறமையான பணியாளர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா 12 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சேவைகள், மென்பொருள், ஏற்றுமதி, இராணுவம், அண்டை நாட்டு உறவுகள், உலகாளவிய செல்வாக்கு என இந்தியா உலக அளவில் செல்வாக்குடன் நிற்கிறது.