ஈரானிய ட்ரோனால் அப்பாச்சி ஹெலிக்கு விழுந்த அடியும்! புலஸ்தினி டி.என்.ஏ சலே திகிலும்!!
தமிழ் திரைத்துறையின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவுடன் படப்பிடிப்பு தளங்களுக்குள் அதுவரை முடங்கிக் கிடந்த தமிழ் திரைத்துறையை கிராமத்து மண் வாசனை கொண்ட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு நகர்த்திய அவரது பெருமையையும் அவர் உருவாக்கிய நடிகர்களும் அவர்களின் நடிப்புத்திறமைகளும் நினைவுக்குவருகின்றது.
இந்திய அரசாங்கத்தின் பத்மசிறி உட்பட்ட 6 தேசிய விருதுகளைப் பெற்ற இந்த படைப்பாளிக்கு தமிழக அரசின் சார்பான இறுதிவிடையை வழங்கப்படுவதற்காக தயார்ப்படுத்தல்கள் இடம்பெறும் நிலையில் தமிழகத்திக் இக்கரையில் உள்ள இலங்கையின் சிறிலங்கா அரசியல் களத்துக்கு திரும்பினால் அங்கு தொடர்ந்தும் அரசியல் இயக்குனர்களின் இயக்கத்தில் சிறிலங்கா அரசபுலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் மருத்துவ கதைகள் தொடர்பான நடிப்புகள் இடம்பெறுகின்றன.
தமிழ் டயஸ்போரா என்படும் புலம்பெயர் தமிழர்களின் விருப்பத்துக்காகவே சுரேஸ்சாவே முகங்கள் குறிவைக்கபடுவதாக ராஜபக்சக்களும் தமது இத்துப்போன பல்லவியை தூக்கிப்பிடிக்கின்றனர்.
விரைவில் தன்னை மையப்படுத்தி இடம்பெறக்கூடிய மருத்துவபரிசோதனைகளில் தான் ஒரு சுகதேகியாக காட்டப்பட்டுவிடக்கூடாது என்பதை ஊகித்து சுரேஸ் சலேயும் உண்ணா நிலைப்போராட்டம் சேலைன் ஏற்றல் ஆகிய காட்சிகளை செய்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இருந்து விடுவிப்பதற்கான நகர்வுகளை செய்யும் நிலையில் இவை உட்பட்ட விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 7 மணி நேரம் முன்