மூன்றாவது தடுப்பூசி ஏற்றிக் கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோசெல்லா வெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது,
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எம்மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ அதே மாதிரியான மிதமான பக்கவிளைவுகளே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஏற்படுகிறது.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 71% பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி உள்ளது. 56% பேருக்குச் சோர்வும், 43% பேருக்குத் தலைவலியும் ஏற்படுகின்றன. 28% பேருக்குத் தங்களது அன்றாடச் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.1% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் ஏற்றிக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.
இதேவேளை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (joe biden) பூஸ்டர் தடுப்பூசியை நேற்றைய தினம் ஏற்றிக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
உலகம் முழுவதும் 23 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.