இனி இவர் தான் உலகின் நம்பர் 1 பணக்காரர் - எலான் மஸ்க் இல்லை
உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை 2021 முதல் தக்க வைத்திருந்த எலான் மஸ்க் (Elon musk) தற்போது பின் தள்ளப்பட்டுள்ளார்.
குறித்த தகவல் ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டு அறிக்கையில் வெளியாகி உள்ளது.
டெஸ்லா பங்குகள் சரிந்துள்ளது
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. மஸ்க்கின் 385 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அதன்படி, ஆரக்கிள் நிறுவனத்தின் பங்குகள் 43% உயர்ந்ததும், எலிசனின் 41% பங்குகளின் மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக அதிகரித்ததும் இதற்குக் காரணம்.
இதனால், 81 வயதான லேரி எல்லிசனின் சொத்து மதிப்பு $393 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, Oracle இணை நிறுவனர் லாரி எல்லிசன், எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் 1 பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
