உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு : 375 ஆண்டுகள் நீருக்குள் மூழ்கியிருந்த மர்மம்
உலகில் இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட கண்டங்களாக 07 கண்டங்கள் திகழ்கின்றன இந்த வரிசையில் உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்தக் கண்டம் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள், கடல் தளத்தில் மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் புதிய கண்டத்தினை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என்று அழைக்கிறார்கள், இது நியூசிலாந்துக்கு அருகே அமைந்துள்ளது.
மடகாஸ்கர் தீவை விட
இந்தப் புதிய கண்டமானது 94 சதவீதம் நீருக்கு அடியில் மூழ்கியுள்ளததாகவும், 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது, இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரிய அளவாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாகவும், இங்குள்ள முன்னதாக கிடைக்கப்பெற்ற பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததிலிருந்து இந்தக் கண்டம் சுமார் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
உலகில் தற்போது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா,வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அந்தாட்டிக்கா ஆகிய 7 கண்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, விரைவில் ஜீலந்தியா (Zealandia) என்ற இந்த புதிய கண்டத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
YOU MAY LIKE THIS